
பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நாளை டெல்லி செல்கிறார்.
2வது முறையாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசு தமது நிதிநிலை அறிக்கையை எதிர்வரும் ஜூலை 5ம் திகதி தாக்கல் செய்கிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து, நிதிநிலை அறிக்கையை தயார் செய்து வருகிறார்.
மத்திய வரவு செலவு திட்டம் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த வகையில் நாளை மறுதினம் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் நாளை மாலை ஓ பன்னீர் செல்வம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இது நிதியமைச்சராக நிர்மலா சீத்ராமன் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் பொதுக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
