
சவுதி அரேபிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மானுக்கு தொடர்புள்ளது என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட விசாரணையாளரான அக்னிஸ் காலமார்ட்டினால், கஷோக்கியின் கொலை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தமக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைக்கு தகுதியானவை எனவும் காலமார்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் சவுதி அரசால் இச்சம்பவம் தொடர்பாக முன்னெடுத்து வரப்படும் விசாரணைகள் சர்வதேச நடைமுறை மற்றும் கணிசமான தரங்களைச் சந்திக்க தவறிவிட்டது எனவும் அதனால் இது நிறுத்தப்பட வேண்டும் எனவும் காலமார்ட் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கஷோக்கி கடந்த வருடம் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் வைத்து சவுதி அதிகாரிகள் சிலரால் படுகொலை செய்யப்பட்டார்.
கஷோக்கியை படுகொலை செய்த அதிகாரிகளுக்கும் சவுதி இளவரசருக்கும் எவ்வித தொடர்புமில்லையென சவுதி அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
