LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, June 19, 2019

வர்த்தக மோதல் : ஜி20 மாநாட்டுக்கு முன்பு ட்ரம்ப், ஜின்பிங் பேச்சுவார்த்தை!

எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ள ஜி20 மாநாட்டில்
அமெரிக்காவும், சீனாவும் தங்களின் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொலைபேசி வாயிலாக நல்ல முறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எங்களுடைய அணிகள் தொடர்ந்து எங்களுடைய சந்திப்பிற்கு முன்பு பேசிக்கொள்ளும்” என ட்விட்டரில் ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக போர் இடம்பெற்று வருகின்றது. கடந்த மே மாதம் அமெரிக்காவில் வரி உயர்விற்கு பிறகு இரண்டு நாடுகளின் பேச்சு தடம் மாறியது.

@realDonaldTrump
Had a very good telephone conversation with President Xi of China. We will be having an extended meeting next week at the G-20 in Japan. Our respective teams will begin talks prior to our meeting.

— Donald J. Trump (@realDonaldTrump) 18 ஜூன், 2019
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump

இந்தநிலையில் ஷீன்ஹுவா என்ற சீன நாட்டின் பத்திரிக்கை அறிக்கைபடி, தான் ஜி20 மாநாட்டில் ட்ரம்பை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜப்பானில் சீன ஜனாதிபதியை சந்திக்கப் போவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

சீனா தன்னுடைய வாக்குறுதியிலிருந்து தவறியது என குற்றம்சாட்டி 200 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீதான வரியை ட்ரம்ப் உயர்த்திய பின்னர், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு முறிந்தது.

சீனாவும், அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் இணையப்போவதாக நினைத்த அனைவருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவும் தன் பங்குக்கு தங்களுடைய தீர்வை வரியை உயர்த்தியது.

இது குறித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் மேலும் 300 பில்லியன் டொலர் மதிப்பிலான வரியை உயர்த்துவேன் என்று டிரம்ப் நிர்வாகம் சீனாவை அச்சுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7