
திட்டத்திற்கு கனடா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான இரும்புக் குழாய்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கையிருப்புத் தளப் பகுதியில் பதிப்பதற்காக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.
பெடரல் நீதிமன்றம் கடந்த மாதங்களில் அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக அனுப்பியிருந்த நிலையில், அதற்கான ஒப்புதலை அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த முடிவு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்பதுடன், அவர் ஒரு தேர்தல் பருவ காலத்தில் காலநிலை பிரச்சினைகள் தொடர்பாக போராட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கூட்டாட்சி தாராளவாதிகள் இந்தத் திட்டத்தை பாதுகாப்பதற்கான ஒருகட்டமாக, கடந்த வருடம் 4.5 பில்லியன் கனடா டொலர்கள் செலவில் குழாய் வாங்குவதற்கான அரிய பணியை மேற்கொண்டிருந்தனர்.
இருந்த போதும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சில மூத்த குடிமக்களும் ட்ரான்ஸ் மவுண்ரெய்ன் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
