பல்வேறு பகுதிகளில் மரநடுகை உள்ளிட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பாசிக்குடா சக்தி வாணி ஆயுள்வேத விடுதியில் மரநடுகை நிகழ்வொன்று இடம்பெற்றதோடு கூட்டுப்பசளை தயாரிப்பு வேலைத்திட்டமும் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது.
பாசிக்குடா சக்தி வாணி ஆயுள்வேத விடுதியின் முகாமையாளர் கே.சிவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சக்தி வாணி ஆயுள்வேத விடுதி உரிமையாளர் திருமதி.கலைவாணி ரவிச்சந்திரன், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி வ.ஜீவானந்தன், ஆயுள்வேத விடுதி ஊழியர்கள் இணைந்து மர நடுகையை மேற்கொண்டனர்.
இதன்பின்னர், ஆயுள்வேத விடுதியில் கிடைக்கப்பெறும் கழிவுகளைக் கொண்டு கூட்டுப்பசளை தயாரிப்பு வேலைத் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதேபோன்று, ஆயுள்வேத விடுதியினை சூழவுள்ள பகுதிகளிலும், பாசிக்குடா கடற்கரை பிரதேசங்களிலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பிரதேசத்துக்கான அரச நிறுவனங்களின் உதவியுடன் முற்று முழுதாக சுற்றாடலை இயற்கை சூழலாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இவ்வேலைத் திட்டத்தை மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கும் செயற்பாடு ஆயுள்வேத விடுதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.






