
ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீடிக்க வகைசெய்யும் சட்டமூலத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.
குறித்த சட்டமூலம் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் கடந்த ஓராண்டு காலமாக, ஆளுனர் ஆட்சிக்காலத்தின் போதும், ஜனாதிபதி ஆட்சிக்காலத்தின் போதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னர் நடைபெற்ற தேர்தல்கள் கலவரங்களில் நிறைவடைந்த நிலையில், இம்முறை நடைபெற்ற தேர்தலில் அசம்பாவிதங்கள் குறைந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீடிக்க வகைசெய்யும் தீர்மானத்தை, கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சரான மெகபூபா முப்தி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க விலக்கிக்கொண்டதை அடுத்து, அங்கு சட்டசபை கலைக்கப்பட்டது.
இதனையடுத்து 6 மாத காலம் ஆளுனர் ஆட்சியும் 6 மாத காலம் ஜனாதிபதி ஆட்சியும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
