
மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஜு20 மாநாட்டில் உலக பொருளாதாரம், தீவிரவாதம், பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் உட்பட்ட பல்வேறு விடையங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கெடுத்துள்ளார்.
இம்மாநாட்டின் பகுதிநேர சந்திப்புக்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட தலைவர்களை சந்திருந்த நிலையில், இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) ரஷ்யா மற்றும் சீன தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
ஏற்கனவே அமெரிக்கா – சீனா ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா – ரஷ்யா மற்றும் அமெரிக்கா – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயும், வரி விதிப்புகள் தொடர்பான முரண்பாடுகள் அதிகரித்து வருகிறன.
இந்நிலையில் குறித்த மும்முனை சந்திப்பானது, அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் ஓர் சமிக்ஞையாக இருக்கலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
