
பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியதில் 11 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டதில் தனியார் கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் பேருந்தொன்றில் பயணம் செய்துள்ளனர்.
குறித்த பேருந்தானது சோபியான் மாவட்டத்திற்கு அருகில் பயணித்த போது, வேக கட்டுப்பாட்டை இழந்ததுடன், அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 11 மாணவர்கள் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
