
அணுக்கழிவுகளை சேமிப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், நெல்லை மாவட்ட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல்லை விஜயராபதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊராட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டதுடன், மத்திய அரசின் குறித்த திட்டத்திற்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த திட்டத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களால் அதிகளவு கருக்கலைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், பிறக்கும் குழந்தைகள் இருதய கோளாறுகளுடன் பிறப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அணுக்கழிவுகளை சேமிப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை என நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின்போது அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக பதில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
