
உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை அவர் வொஷிங்டன் செல்லவுள்ளார்.
அங்கு செல்லும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை சீரமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான, இழுபறியில் உள்ள ஏனைய வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் இருநாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீனாவில் கடந்த ஆறுமாத காலமாக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் விவகாரம் தொடர்பாகவும் இதன்போது இரு தலைவர்களும் ஆராய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
