
ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஹன்சன் வீதி வடக்கு மற்றும் சார்ட்டர்ஸ் வீதியில் நேற்றிரவு (வியாழக்கிழமை) இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்திக்குத்திற்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
