
செல்வாக்கு செலுத்திய 100 பெண்களின் பட்டியலில் தமிழ் பெண் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.
பிரித்தானிய உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் லண்டனில் அண்மையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
குறித்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் இடம் பிடித்துள்ளார்.
லண்டனில் பொருளாதாரம் பயின்று அங்கேயே பணிபுரிந்த நிர்மலா சீத்தாராமன் பிரித்தானியாவுக்கு மிகவும் பழக்கமானவர் என குறித்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியா – இந்தியா இடையிலான உறவை மேம்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் மாத இறுதியில் பிரித்தானிய – இந்தியா வாரம் கடைபிடிக்கப்படும்.
இதை முன்னிட்டு, இருநாடுகள் இடையே உறவு மேம்பட உதவியவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
இந்தநிலையிலேயே பிரித்தானியா – இந்தியா இடையே நல்லுறவை ஊக்குவிக்க செல்வாக்கு செலுத்திய 100 பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
