
த 2018ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுமி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு பஞ்சாபின் பதான்கோட் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் ஏழுபேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் 6 பேர் குற்றவாளிகள் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி குறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கிராம தலைவர் சஞ்சி ராம், சிறப்பு பொலிஸ் அதிகாரிகளான தீபக் காஜுரியா, சுரேந்தர் வர்மா மற்றும் தலைமை பொலிஸ் அதிகாரியான திலக் ராஜ் உள்ளிட்டவர்கள் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரில் தொலைந்துபோன தனது குதிரையை தேடிச் சென்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், இது தொடர்பில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உடப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
