
1 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியிலிருந்து பீகாரின் கயா நோக்கி விபத்துக்குள்ளான குறித்த பேருந்து பயணித்துள்ளது.
குறித்த பேருந்து ஹசாரிபாக் மாவட்டத்திலுள்ள டணுவா காட்டி பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லொரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயம் அடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
குறித்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
