
பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக புத்தளம் மாவட்டத்திலும் ரயில் சேவைகள் இடம்பெறவில்லை.
இந்நிலையில், மாவட்டத்தின் அனைத்து ரயில் நிலையங்களும் வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக ரயில்வே திணைக்கள ஊழியர்களால் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக பேசித் தீர்க்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டத்தை ஊழியர்கள் நடத்திவருகின்றனர்.
இதனிடையே, இன்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, குறித்த விடயம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்
