
மன்னார் பிரதேச சபையால் வழங்கப்பட்ட அனுமதியே தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
குறித்த தோரண நுழைவாயில் அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம். முஜாகிர் கையெழுத்திட்ட கடிதம் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், “மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் தோரண நுழைவாயில் அமைக்க மன்னார் பிரதேச சபையினால் கடந்த 14 ஆம் திகதி வழங்கப்பட்ட அனுமதியின் பின்னர் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதனை கருத்திற்கொண்டு எமது பிரதேச சபை எல்லைக்குள் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக இவ்விடயம் குறித்து கலந்துரையாடலை ஏற்படுத்தி சுமூகமான தீர்வினை ஏற்படுத்தும் வரை என்னால் வழங்கப்பட்ட அனுமதியானது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்படுகின்றது” என குறித்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் தோரண நுழைவாயில் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து திருக்கேதீஸ்வரத்திற்கான தோரண நுழைவாயில் அமைப்பதற்கு அனுமதியை வழங்கினர். இதற்கு மன்னார் பிரதேச சபையினால் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மன்னார் மாந்தை சந்தியில் எந்தவொரு மதப்பிரிவினுடைய தோரண நுழைவாயில்களும் அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், தற்போது வரை எவ்வாறு காணப்பட்டதோ அதேபோன்று இருக்க வேண்டும் எனவும் எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என நானாட்டான் பிரதேச சபையின் அமர்வின் போது தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
நானாட்டன் பிரதேச சபையின் 16ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில், குறித்த பிரேரணையை சபை உறுப்பினர் ஜெயானந்தன் குரூஸ் சபையில் முன்வைத்ததோடு, 14 உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
