
இலத்திரனியல் அறிவிப்புப் பலகை ஒன்றில், இனத்துவேச வாசகங்களை மாற்றம் செய்த நபரை அல்லது நபர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரம்டனில், வோடன் வீதி மற்றும் ஹோவ்டன் பவுல்வர்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்களை நீதிமன்றில் நிறுத்தவேண்டும் எனவும், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவி தேவை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அந்த அறிவிப்புப் பலகையில் காணப்பட்ட வாசகம் சினமூட்டுவதாகவும், மனதைப் புண்படுத்தும் வகையிலும், அவமதிப்பதாகவும் காணப்பட்டதாகவும், எவ்வளவு நேரமாக அந்த வாசகம் அங்கே காணப்பட்டது என்பது தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
