
தரையிறக்கப்பட்டுள்ளது.
112 பயணிகளுடன் வான்கூவரிலிருந்து அலாஸ்காவுக்கு புறப்பட்ட விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் இயந்திரங்களில் ஒன்று திடீரென பழுதடைந்தமை காரணமாகவே விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் அவசரமாக இறக்கப்படுவதாக விமானி அறிவிக்க, விமானத்தில் அவ்வப்போது அதிர்வு ஏற்பட்டுள்ளதை பயணிகள் உணர்ந்துள்ளனர்.
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதன் பின்னர் தான், திடீரென விமானத்தின் ஒரு இயந்திரம் பழுதாகி விட்டதாகவும், ஒரு இயந்திரத்தின் உதவியுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் விமானி தெரிவித்துள்ளார்.
தங்களை பயமுறுத்தாமல் பத்திரமாக தரையிறக்கியதற்காக விமான ஊழியர்களை பயணிகள் பாராட்டியுள்ளனர்.
