உலக சுற்றாடல் தனத்தினை முன்னிட்டு மாங்குளம்நகரிலுள்ள ஏ-9 வீதியில் குறித்த மரநடுகை நிகழ்வு இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இந்திய துணைத் தூதுவர், வட. மாகாண அவைத் தலைவர், யாழ். மாநகரசபை மேயர், பிரதேச சபைகளின் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், விவசாய திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் குகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டோர் ஏ-9 வீதி ஓரமாக மர நடுகையிலும் ஈடுபட்டனர்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் மரநடுகை, சுற்றுச்சூழல் தூய்மையாக்கல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.





