ரொறன்ரோ டவுன்ரவுண் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள், சுமார் ஐந்து அடி ஆறு அங்குல உயரமுள்ள, மெல்லிய உடல் தோற்றம் கொண்ட 25 வயது ஆண் ஒருவரைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள், அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த புதன் கிழமை, புளுர் வீதி மற்றும் செர்போர்ன் வீதிப் பகுதியில் இரவு 8.20 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், அடி வயிற்றுப் பகுதியில் கத்திக் குத்துக் காயங்களுக்கு உள்ளான ஆணொருவர் ஆபாத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





