திகரித்துள்ளதாகவும், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உறுதியாக தனது தலைவர் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் கட்சியை மறுசீரமைப்பு செய்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்பமொய்லி குறிப்பிட்டுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பல மாநிலங்களில் கட்சிக்குள் எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கின்றன. ஒழுங்கின்மை அதிகரித்து வருகிறது.
காங்கிரஸின் தலைவரான ராகுல் காந்தி பதவி விலகும் பட்சத்தில், நேர்மையான, சரியான நபரிடம் கட்சியின் தலைமையை ஒப்படைக்க வேண்டும்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து ராகுல் காந்தி இராஜினாமா செய்வதாகவும், அந்த பொறுப்புக்கு காந்தி குடும்பத்தை சாராத ஒருவரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையளிக்க யாராவது ஒருவர் முன்வரவேண்டும் என நான் நினைத்தேன். அந்த சமயத்தில்தான் ராகுல் காந்திக்கு கடிதமொன்றை எழுதினேன்.
அதில் நேரு குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் யாருக்காவது காங்கிரஸின் தலைவர் பொறுப்பை வழக்க விரும்பினால் குறித்த பொறுப்பை எனக்கு வழங்குங்கள் என கேட்டுகொண்டேன்“ என தெரிவித்துள்ளார்.
