க்கியால் சுடப்பட்ட 28 வயது ஆண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
பிரிட்டானியா வீதி மற்றும் டக்யுவ் பவுல்வர்டு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வளாகம் ஒன்றில், நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு 11.24 அளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்தினைச் சென்றடைந்த பொலிஸார், அந்த வர்த்தக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நிலத்தில் வீழ்ந்து கிடந்ததாகவும், உடனடியாகவே அவர் ரொறன்ரோ தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரிடம் பேசியுள்ள போதிலும், போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்றவேளையில் பெருமளவானோர் அங்கே இருந்திருக்கக்கூடும் என்பதனால், சம்பவத்தை நேரில் கண்டோர், அது தொடர்பாக தகவல் அறிந்தோர், அல்லது சம்பவம் தொடர்பான ஒளிப்பதிவு ஆதாரங்களை வைத்திருப்போர் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






