
மதூஷுடன் தொடர்பினை வைத்திருந்த 7 அரசியல்வாதிகள் குறித்த தகவலை வெளியிடப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பயாகல பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னர் குறித்த அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பட்டியலிலுள்ள அரசியல்வாதிகளில் மூவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களெனவும் ஏனைய நால்வர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களென்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
