
உள்ளாகியவர்களும் நாட்டை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் சென்றவர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைவது நிச்சயமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
குறித்த தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தனித்து நின்றே போட்டியிட தீர்மானித்துள்ளது.
மேலும் வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம் என்று ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் பொய்யானவையாகும்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பெயரை உரிய நேரத்தில் அறிவிப்போம்.
அந்தவகையில் எதிரணியில்தான் வேட்பாளர் தெரிவு தொடர்பில் சர்ச்சைகள் நிலவுவதுடன் குடும்ப ஆட்சியை நாட்டில் கொண்டு வருவற்கு சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால் மக்கள் ஒருபோதும் இதனை விரும்பமாட்டார்கள் என்பதுடன் நாட்டை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் சென்றவர்களுக்கு ஆட்சியை மீண்டும் வழங்க மாட்டார்கள்” என ரணில் தெரிவித்துள்ளார்.
