அமல்படுத்த மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டதுடன், தகுதியுள்ள விவசாயிகளை திட்டத்தில் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய வேளாண் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
குறு, சிறு விவசாயிகளின் நலனுக்காக ‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி’ என்ற திட்டம் கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் 2 ஹெக்டெயருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஓராண்டில் 3 தவணைகளாக தலா ரூ.2,000 என்ற வகையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 31ஆம் திகதி மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தை தகுதிவாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதால் நாடு முழுவதும் 15 கோடி விவசாயிகள் வரை பயன்பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே நேற்று விவசாயிகள் நிதியுதவி திட்ட விரிவாக்கத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது.
