
திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு 24 பர்கனஸ் மாவட்டம்- சண்தேஷ்காலை, நயஓட்டிலில் நேற்று (சனிக்கிழமை) இரவு, பா.ஜ.க – திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையில் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.
கட்சி கொடிகளை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே பின்னர் கலவரமாக மாறியுள்ளது. இதன்போது இருதரப்பினரும் கற்களை எறிந்து மோதலில் ஈடுபட்டதுடன் துப்பாக்கி பிரயோகமும் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த மூவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த பலரை, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சம்பவம் குறித்து பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் சயந்தன் தெரிவித்துள்ளதாவது, “பா.ஜ.க.வின் கட்சி கொடிகளை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அகற்ற முற்பட்டமையால் எமது ஆதரவாளர்கள்அதனை தடுக்க முற்பட்டனர்.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டனர். இதனால் 3 தொண்டர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது” என கூறியுள்ளார்.
அதேபோன்று திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ஜோதிப்ரியோ முல்லிக் சம்பவம் குறித்து தெரிவித்ததாவது, “எங்கள் கட்சி தொண்டரான கைலும் மொல்லா, கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது பா.ஜ.க.தொண்டர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
இதன்போது அவர் தப்பிச்செல்ல முற்பட்டபோது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அவர் உயிரிழந்துள்ளார். பா.ஜ.க மேற்கு வங்காளத்தில் அமைதியை சீர் குலைக்க முயற்சி செய்கிறது” என ஜோதிப்ரியோ முல்லிக் குற்றம் சுமத்தியுள்ளார்.
