
நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாநகர பொலிஸ் உதவி ஆணையாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறை வளாகம், கைதிகள் அறை, சமையல் அறை, மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பொலிஸார் சோதனை நடத்தினர்.
சுமார் 2 மணிநேரம் நடத்திய குறித்த சோதனையில் எந்ததொரு சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் கஞ்சா, கைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
