நடத்த அக்கட்சித் தலைமை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடந்ததால் பா.ஜ.க. நிர்வாகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் கட்சியின் நிர்வாகத் தேர்தலை நடத்த பா.ஜ.க. தயாராகி வருகிறது.
இதற்காக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 13 மற்றும் 14ஆம் திகதிகளில் சந்திக்கவுள்ளார். இதில் பங்கேற்குமாறு மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் கட்சியின் உறுப்பினர் இணைப்பு, நிர்வாகிகளை தேர்வு செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. கீழ்மட்டத்தில் இருந்து மாநில அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின்னர், கட்சியின் தேசிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மத்திய உட்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் கட்சி விதிகளின்படி வேறு ஒருவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
