
என்பது ஆபத்தான கொள்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முஸ்லிம் பெண்களை காப்பாற்ற சட்டம் கொண்டு வந்த மோடி, இந்து பெண்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கோவையில் நடைபெற்ற ஆணவ படுகொலை தொடர்பாக அங்கு கூடிய விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நீட் தேர்வில் மத்திய தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டை கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.
தமிழகத்தின் குடி தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது ஆபத்தான கொள்கை. இது ஒற்றையாட்சிக்கு வித்திடும் என தெரிவித்துள்ளார்.
