
வீதமான கனேடியர்கள் நம்பி விடுவதாக அண்மைய கருத்துக் கணிப்புக்களின் மூலம் தெரியவந்துள்ளது.
முகநூல் ஊடாகவே அதிகளவில் போலியானச் செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படுவதாக, கருத்துக் கணிப்பில் பங்கேற்ற கனேடியர்கள் தெரிவிக்கின்றனர்.
போலிச் செய்திகளுக்கு ஏமாறும் நபர்களின் எண்ணிக்கையை ஒப்பீட்டளவில், ஏனைய நாடுகளை விடவும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து வீதமான கனேடியர்கள் அடிக்கடி போலிச் செய்திகளை நம்பும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டப்பட்டள்ளது. அதேவேளை சமூக ஊடகங்கள் தொடர்பிலான நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
