
மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஹமில்ட்டன் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏதாவது மின் கம்பிகள் வீழ்ந்து கிடப்பதனைக் கண்டால், அதிலிருந்து குறைந்தது பத்து மீட்டருக்கு அப்பால் இருந்தவாறு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாகனத்தில் இருக்கும்போது மின் கம்பிகள் அறுந்து வாகனத்தினுள் வீழ்ந்தால், வாகனத்தினுள் இருந்தவாறே 911 அவசர சேவைக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி, வுட் இல் வீதி மற்றும் கொன்செஸ்சன் 4 வீதி தெற்கு பகுதியில் 21 வயது ஆண் ஒருவர், வீழ்ந்து கிடந்த மின் கம்பியினை தொட்டு உயிரிழந்ததையடுத்து, பொலிஸார் இந்த அவசர எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
