
சட்டமன்ற உறுப்பினராக இருந்த யூலியா முன்றோவின் மறைவிற்கு, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட், இரங்கல் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘யூலியா முன்றோவின் இழப்பு தம்மை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.
அத்துடன் அவர் தனது சமூகத்திற்கும் தனது மாநிலத்திற்கும் ஆற்றியுள்ள சேவைகள், ஒன்ராறியோ சட்டமன்றில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ள தம் அனைவருக்கும் சிறந்த உதாரணம்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஒன்ராறியோ சட்டமன்றில் மிக நீண்டகாலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த யூலியா முன்றோ தனது 72ஆவது வயதில் கடந்த 12ஆம் திகதி காலமானார்.
1995ஆம் ஆணடிலிருந்து யோர்க் சிம்கோ தொகுதியை முற்போக்கு பழமைவாதக் கட்சி சார்பில் பிரதிநிதித்துவந்த அவர், கடந்த 2018ஆம் ஆண்டு மாகாண தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
