மட்டக்களப்பு மாவட்டத்தில்; வீசிய பலத்த காற்றினால் 70 வீடுகள் 283 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவூனதீவு பிரதேசத்தில் பலத்தகாற்றினால் கொத்தியாபுல புதியமண்டபத்தடி காஞ்சிறம்குடா இலுப்படிச்சேனை மண்டபத்தடி ஆகிய கிராமங்களில் 62குடும்பங்களை சார்ந்த 247 நபர்கள்களும் இப்பகுதியில் 58 வீடுகள் பகுதியளவிலும் 4 சிறுகடைகளும் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது
மண்முணைபற்று ஆரயைம்பதி பிரதேசசெயலகப் பிரிவில் மண்முணையில் 1குடும்பமும் மாவிலங்குதுறையில் 1 குடும்பமும் காங்கையன்ஓடை தெற்கில் 2குடும்பமும் காங்கையன்ஓடையில் 1குடும்பமும் ஆரையம்பதியில் 1குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த சேவைகள் நிவாரன நிலைத்தின் உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் மாவட்ட தகவல் திணைக்கள ஊடகப்பிரிவிற்கு தெரிவித்தார்
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான நிவாரனப்பணிகளை துரிதப்படுத்துமாறும் அப்பகுதிகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பணிப்புரைவிடுத்துள்ளார் அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிக்கு முதற்கட்டமாக 10.000ரூபா வழங்கப்படவுள்ளது. இந்த காற்றினால் மொத்தமாக 70 குடும்பங்களை சார்ந்த 283 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
அத்தோடு இடி மின்னல் தாக்கத்தினால் செங்கலடி பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட செங்கலடியை சேர்ந்த ஒருவர் கொடுவாமடுவில் வைத்து மின்னல் தாக்கத்திற்கு இலக்கான இருவரில் ஒருவர் மரணமடைந்துள்ளார் அவருடைய மரண செலவிற்க்காக பிரதேசசெயலாளர் என்.வில்வரெத்தினம் 15.000ரூபாவை வழங்கியிருந்தார் இந்த நிகழ்வுகளின் அனர்த்த முகாமைத்துவ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவநாதன் அவரு இணைந்து செயல்ப்பட்டு வருகின்றார்.
