
பெண்களை கைது செய்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி கடுங்கஞ்சேன நகரத்தின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது, கும்பாபிஷேகத்திற்கான விஷேட பூஜைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது பக்தர்களின் நெரிசல் அதிகமாக காணப்பட்டதை வாய்ப்பாகப் பயன்படுத்தி பெண்ணொருவர் தானும் வழிபாட்டில் ஈடுபடுவதைப் போல் நடித்து, அங்கு வழிபாட்டில் ஈடுபட்ட பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துள்ளார்.
இதனையறிந்த குறித்த பெண் கூச்சலிட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிஸார், அந்த பெண்ணை கைது செய்ததோடு, அறுக்கப்பட்ட தங்க சங்கிலியையும் மீட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த திருட்டுடன், தொடர்புடைய மொத்தம் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இவ்வாறான திருவிழாக்களில் குழுவாகச் சென்று திருட்டு வேலைகளில் ஈடுபட்டுவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஆறு பெண்களும் வாழைச்சேனை, புத்தளம், ஆலாவத்த, வத்தேகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 23 தொடக்கம் 28 வரையான வயதையுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
