
தாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்குவதே தமது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது பெரும் சவாலான விடயம் என்றாலும் நம்மால் இந்த வெற்றியை நிச்சயமாக எட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதின்போது மோடி உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “வரும் 2024ஆம் ஆண்டு 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு. இது சவாலானது. ஆனால் நம்மால் இந்த வெற்றியை நிச்சயமாக எட்டமுடியும். வளர்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதில் மாநிலங்களின் பங்கு மிகமுக்கியம்.
நாடுமுழுவதும் பல இடங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சியை எதிர்கொள்ள ‘ஒவ்வொரு சொட்டு தண்ணீரும், கூடுதல் பயிர்’ என்பதை உணர்ந்து விவசாயத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட ஜல்சக்தி துறை நமது தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும்” என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
