
தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வதோரா அருகிலுள்ள உணவகம் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஏழு பேர் ஈடுபட்ட போது, விஷவாயுவின் தாக்கத்தின் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகேஷ் பட்டன்வாடியா, அசோக் ஹரிஜன், பிரிஜேஷ் ஹரிஜன், மகேஷ் ஹரிஜன், விஜய் சவுத்ரி, சகாதேவ் வசவா, அஜய் வசாவா ஆகிய 7 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த உணவகத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
