
ஆதரவு தந்து வருவதாகவும், பயங்கரவாத செயல்களால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்நாடுகளையே பொறுப்பாக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் எங்கு பயங்கரவாத செயல்கள் நடந்தாலும் அதற்கு எதிராக இந்தியா உறுதிப்பட செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை மறைமுகமாக அவர் விமர்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பயங்கரவாத்தை தடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் இணைந்து ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும். அத்துடன் கோரச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பிற நாடுகள் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேகில் நடைபெறும் குறித்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட 8 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
