skip to main
|
skip to sidebar
ஒன்ராறியோ வெலிங்க்டன் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
ஒன்ராறியோ வெலிங்க்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ரொறன்றோவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிராண்டன் ஜேம்ஸ் ரிங்யூட் என்ற 25 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதில் சம்பவ இடத்திலேயே குறித்த ஆண் உயிரிழந்ததாகவும் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற அவசர உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை, மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ மாகாண பொலிஸாரின் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.