மெக்ஸிக்கோவின் அகதிகள் சுமையை சுலபமாகக் குறைக்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை கனடாவிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.புதிதாக புலம்பெயர்ந்துள்ள குடியேற்றவாசிகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களை மீளக்குடியமர்த்துவன் மூலம் இந்த உதவியை புரியுமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த குடியேற்றவாசிகளில் பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளுமே உள்ளடங்குகின்றனர்.
மெக்ஸிக்கோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் பலவித நெருக்கடிகளையும், கசப்புணர்வுகளையும் எதிர்கொண்டு தப்பிப்பிழைக்கும் மக்கள் முன் ஏற்பாடில்லாமல் வௌியேறி பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அவர்களில் பலர் உள்நாட்டு வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களாவர். இந்தநிலையில் தமது இருப்பிடங்களை விட்டு குடும்பங்களுடன் வடக்கு நோக்கி நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது.





