LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, August 9, 2020

தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு

நடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கவல்லது எனவும் பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மக்கள் வரலாற்றில் தொடர்ச்சியான இன அழிவுகளையும் சமூக பொருளாதார இழப்புக்களையும் அவலங்களையும் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர். இவை தொடர்கின்றன. இவற்றிற்கு இன்னுமே ஒரு தீர்வு ஏற்படவில்லை.
இப்பொழுது நடைபெற்று முடிந்த 2020 பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல வகையான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆறுதலான ஒரு ஜனநாயக வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதேவேளை, தேர்தல் நடைமுறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் கூட்டமைப்பு பொறுப்பேற்கின்றது. இவை பற்றித் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை விரைவில் கூடி ஆராயவுள்ளது.
அத்தோடு, தமிழரசுக் கட்சியின் உயர்பீடமும் (அரசியற் குழுவும்) அடுத்து மத்திய செயற்குழுவும் கூட்டப்பட்டு, தேர்தல் காலத்திலும் தேர்தல் காலத்திற்கு அண்மித்த காலப்பகுதியிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பாக பூரணமாக விசாரனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி நடவடிக்கைக்குழு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அடைந்த வெற்றி, ஏற்பட்ட இழப்பு தொடர்பாக கூட்டமைப்பு உயர்பீடம் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் தொடர்பாக இன்று கேள்வி எழாமலே வெளியிடப்பட்ட தன்னிச்சையான கூட்டுப் பொறுப்பற்ற பத்திரிகை செய்திகள் மீண்டும் கட்சிகளுக்குள்ளும், மக்களிடத்திலும் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
மிகவிரைவில், உரிய வேளையில் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பாக தமிழரசுக் கட்சி உயர்மட்டக் குழுவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவும் தனித் தனியே ஆராய்ந்து கூட்டாக முடிவை அறிவிக்கவுள்ளன.
தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கவல்லதாகும். பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7