20 வயதான குறித்த இளைஞர் அதிகபட்சமாக 19 மொழிகளை சாதாரண பேசும் வல்லமையை பெற்றுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை அவர் இணையம் காணொளிகள், இசை மற்றும் நண்பர்களுடனான உரையாடலின் போது அதிகளவில் பயன்படுத்துபவையாகும். தனது திறமை பற்றி குறித்த இளைஞர் கூறுகையில், “நான் மிகவும் கிரகிக்கும் திறமையை கொண்ட மாணவன்,
அதனால் நான் மொழியறிவை மேற்படுத்துவதற்காக காணொளிகள், திரைப்படங்கள் மற்றும் இசை வடிவங்களை கேட்பது உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன்
அத்துடன் உரையாடல்களைக் கேட்பது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் மொழிக்கு என்னால் முடிந்த அளவிற்கு நியாயத்தை வழங்க முயற்சி செய்கிறேன் “என்று அவர் செவ்வியொன்றில் கூறினார்.
குறித்த இளைஞர் மென்டரின், ஸ்பெனிஸ், போர்த்துக்கல், இத்தாலியன், ஜேர்மனி, ரஷ்ய மொழி, ஹீப்ரு, ரோமானிய மொழி, சுவீடன், ஜோர்ஜியன், ஆர்மேனியன், கென்டோனீஸ், கொரியன், எஸ்பெரென்டோ மற்றும் டச் மொழிகளையும் சரளமாக பேசும் வல்லமையை கொண்டுள்ளார்.
தான் முன்னதாக மொழிகளின் மீது பற்று கொண்டிருந்ததாகவும், மாறுபட்ட மொழிகளை கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
தனது 10 வயது முதலே இந்த ஆர்வம் ஏற்பட்டதாகவும், அரேபிய மொழியை மூத்த குடும்ப உறுப்பினர்களிடம் கற்றுக் கொண்டதாகவும் ஜோசஸ் அவாட் குறிப்பிட்டார்.
“நான் எனது பெற்றோரிடம் அதிக மொழிகளை கற்பதற்கு உள்ள ஆர்வம் தொடர்பாகவும், மூத்த குடும்ப அங்கத்தவர்களிடம் கற்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தேன், அவர்கள் இதற்கு மேலதிகமாக இணையத்திலும் அதிகளவான மொழிகளை கற்க முடியும் என்று கூறினார்கள்” என அவாட் தெரிவித்தார்.






