கனடாவின் பல பகுதிகளிலும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில் கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்துவதற்கு சட்டரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சில பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக பாடசாலை மாணவர்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும் இலக்குவைத்து இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொண்டு நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





