ஒன்ராரியோவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.கார் ஒன்று வீதியின் அருகே இருந்த வீதிப்பாதுகாப்புத் தூணுடன் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 39 வயதான பெண்ணொருவரே படுகாயமடைந்துள்ளதாகவும், அவருடன் பயணித்த மற்றுமொருவர் காயங்களின்றி தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





