LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, May 21, 2019

நாடாளுமன்ற தேர்தல் – தேர்தல் ஆணையாளர்கள் ஆலோசனை கூட்டம்

இந்திய நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் குறித்து ஆராய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா நாளை (புதன்கிழமை) காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த ஆலோசனை கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றது. இதனையடுத்து கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன.

குறித்த கருத்துக்கணிப்புகளின் படி பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என எதிர்வுகூறப்பட்டது.

இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன், தேர்தல் முடிவுகளின் பின் ஏற்படபோகும் மாற்றம் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்கட்சிகள் இணைந்து ஆலோசனை கூட்டமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7