skip to main
|
skip to sidebar
கருத்துக்கணிப்பு முடிவுகள்: பிரதமர் மோடிக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க தலைமையிலான அரசுடனான நெருக்கமான உறவு தொடரும் என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமென்று தேர்தலுக்குப் பின்னரான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி, கருத்துக்கணிப்பு முடிவுகள் மாலைதீவு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் கருத்துக்கணிப்பு பா.ஜ.க.விற்கு சாதகமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.