உக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார்.இதனை அடுத்து நாடாளுமன்றில் பெரும்பானமையை பெற்றுக்கொள்வதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி, பொதுத்தேர்தல் நடத்தவும் அறிவித்தல் விடுத்துள்ளார்.
அரசியல் அனுபவமில்லாத வொளடிமீர் சிலேன்ஸ்கி கடந்த மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும் பாராளுமன்றத்தில் அவருடைய புதிய கட்சியின் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமும் இல்லை என்பதனால் பொதுத்தேர்தல் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
மேலும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகால மோதலில் 13 ஆயிரம் பேர் கிழக்கு உக்ரேனில் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்நிலையில் அங்கு போர்நிறுத்தத்தை அடைய வேண்டும் என்பதே தனது முதல் இலக்கு என ஜனாதிபதி வொளடிமீர் சிலேன்ஸ்கி கூறியுள்ளார்.





