
இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் பக்தர்கள் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடிப்பு இடம்பெறும்போது பள்ளிவாசலுக்குள் சுமார் நூறு பேர்வரை காணப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.
குவெட்டா நகரானது பல தசாப்தங்களாக தொடர்ந்து பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வந்துள்ளது. இவ்வளவு காலமும் கிளர்ச்சியாளர்கள் சக்தி உட்கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்பு படையினரையே இலக்கு வைத்து தாக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
