skip to main
|
skip to sidebar
பிரதமர் நரேந்திர மோடிக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து!
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வரும் பிரதமரும் தனது வாழ்த்தினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் மேலும், “கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற கனடியர்கள் மற்றும் இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நான் மோடியுடன் இணைந்து பணியாற்றுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.