உடன்படிக்கை அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் சாத்தியமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க தூதுக்குழுவினருக்கும், சீனப் பேச்சுவார்த்தையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்கிடையிலான வர்த்தக முரண்பாடுகளை தீர்க்க முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீன துணை பிரதமர் அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள இருதரப்பும் இவ்வாறு முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் வர்த்தக உடன்படிக்கைக்கான சாத்தியம் காணப்படுவதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.