அதிகாரத்தை கைவிட நிர்ப்பந்திக்கும் வகையிலான போராட்டங்களை தீவிரப்படுத்த தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய தினத்திலும் (வியாழக்கிழமை) போராட்டத்தில் ஈடுபடுமாறு எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோ அரச ஊழியர்களை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் நேற்று கரகசில் இடம்பெற்றிருந்தது. இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
ஆனால், அதிகாரத்தை கைவிட்டு ஆட்சியை துறப்பது என்ற விடயத்தை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி மதுரோ, ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டம் தீட்டுவதாக அமெரிக்கா மீது கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
மேலும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவோர் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், இராணுவ நடவடிக்கைகளின் மூலம் வெனிசுவேலாவின் நெருக்கடியை தீர்ப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்தார்.
அத்துடன், ரஷ்யாவும், கியூபாவும் மதுரோவுக்கு ஆதரவளித்து நாட்டை சீர்குலைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.